ETV Bharat / state

ரூ. 18.80 கோடி மதிப்பிலான தொழிற்பயிற்சி கட்டடங்களை திறந்து வைத்த ஸ்டாலின்

author img

By

Published : Dec 16, 2022, 1:06 PM IST

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.18.80 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள்!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.12.2022) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 18 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள், மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகக் கட்டடங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (Industrial Training Institutes) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களைத் தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் 7 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் 7 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிலும், கட்டப்பட்டுள்ள புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள்;

தருமபுரியில் 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம்; சென்னை, அம்பத்தூரில் 1 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சென்னை மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்திற்கு புதிய கட்டடம்; என மொத்தம் 18 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ. வீர ராகவ ராவ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.