ETV Bharat / state

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இரு வீராங்கனைகளுக்கு அரசு வேலை! - tokyo Olympic participants

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த இரு வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

அரசு வேலை
அரசு வேலை
author img

By

Published : Oct 11, 2021, 7:47 PM IST

சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீராங்கனைகள் சுபா, தனலட்சுமி ஆகியோர் 4 × 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் வகையிலும், இவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் (அக்.11) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் சுபா, தனலட்சுமி ஆகியோருக்கு வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.