ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் - மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.. - மாணவர்கள் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும்

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் ஆசிரியர் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் -  மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

author img

By

Published : Jun 13, 2022, 11:13 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று (ஜூன்.13) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிய வகுப்புகளுக்கு மாணவச் செல்வங்கள் திரும்புகின்றனர். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் சரிவர நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வழக்கம் போல் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கின்றன. இடைப்பட்ட ஆண்டுகளில் கரோனா பரவலால் மாணவர்கள் இழந்தவை ஏராளம். இதனிடையே, அரசு பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு, புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் -  மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..
பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் - மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் ஆன்லைனில் படிப்பது வேறு விஷயம். ஆனால் பள்ளியில், குழந்தைகள் நல்ல சூழலைப் பெறுகிறார்கள், இது அவர்களை மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் செய்கிறது. அரசு தேவையான COVID முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.

பள்ளி திறப்பின் மூலம் 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இதனிடையே, பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

கரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாக கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை தற்போது அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

அதேபோல் இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களை கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி முகாம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.