ETV Bharat / state

வாள்வீச்சு வீராங்கனைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர்

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

fencer bhavani devi  saber bhavani devi  5 lakhs fund for fencer bhavani devi  cm stalin give 5 lakhs fund for fencer bhavani devi  chennai news  chennai latest news  chennai cm stalin give 5 lakhs fund for fencer bhavani devi  cm stalin  mk stalin  வாள்வீச்சு வீராங்கனை  வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி  வாள்வீச்சு வீராங்கனைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி  சென்னை செய்திகள்  சென்னை வாள்வீச்சு வீராங்கனைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி  ஒலிம்பிக் போட்டி
5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பவானிதேவி தாயாரிடம் வழங்கிய முதல்வர்...
author img

By

Published : Jun 20, 2021, 2:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.

அவரின் ஊக்கத்தினையும், விடாமுயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் ’விளையாட்டு அலுவலர்’ பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெறுவதற்காக நிதியுதவி

பவானிதேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.

இந்நிலையில் பவானி தேவி தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. தற்போது இப்போட்டிக்காக அவர் இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், இன்று (ஜூன்.20) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: மேகேதாட்டு அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.