ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்து பயணம் - முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் - செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்து பயணம்

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

author img

By

Published : Jul 1, 2022, 2:14 PM IST

சென்னை: காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி (44th Chess Olympiad - 2022) குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் லச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து இன்று (ஜூலை.1) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் “நம்ம செஸ், நம்ம பெருமை”

முதலமைச்சர் ஸ்டாலின், ஜூன் 9 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் “நம்ம செஸ், நம்ம பெருமை” - “இது நம்ம சென்னை, நம்ம செஸ்” - “வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு” போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சி.வெ.மெய்யநாதன் உள்ளிட்ட அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த பல்வேறு துரித நடவடிக்கையின் அடிப்படையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஜூலை 28 ல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்ட முறையில் தொடக்க விழா நடைபெற உள்ளது. விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவை மிக நேர்த்தியான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 நிறைவு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்து பயணம் - முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மற்ற மாநிலங்களுக்கும் விளம்பரங்களைக் கொண்டு சேர்க்க வகையில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் விளம்பரங்கள் இடம்பெற செய்யப்பட்டுள்ளது.

இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதே போல் சென்னை நகர் முழுவதும் எல்.இ.டி மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த விளம்பரங்கள் செய்யப்பட உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.