ETV Bharat / state

"முதலமைச்சர் இன்செக்யூராக இருக்கிறார்" - அண்ணாமலை! - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

தமிழக முதலமைச்சர் இன்செக்யூராக இருப்பதால், சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி தவறாக பேசுபவர்களை கைது செய்கிறார் என்றும், நல்லதை நோக்கி செல்வதால் தினமும் தன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பேட்டி
பேட்டி
author img

By

Published : Mar 23, 2023, 2:24 PM IST

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(மார்ச்.23) சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். சில உட்கட்சி விஷயங்களை பேசுவது பதவிக்கு அழகல்ல. மக்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் என்ன பேசினாலும் வெளியே பேசுவது என் கடமை. காலமும் நேரமும் வரும்போது பேசுவேன். உள்கட்சியில் நடக்கும் விஷயங்களை பேசுவது சரியாக இருக்காது. உங்களிடம் சொல்ல வேண்டிய தகவலை கண்டிப்பாக பேசுவேன். கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால் 2 நாளில் பட்ஜெட் குறித்து விரிவாக பேசுவேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால், நடிகர் வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி படம்தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அவர்களை அதிகாலையில் கைது செய்வதில்தான் முனைப்பு காட்டுகிறார். பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக முதலமைச்சருக்கு சமூக வலைதளத்தில் வரும் கருத்துகள் முள் போல் குத்துகிறது. இத்தனை ஆண்டுகள் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அவர் எந்தளவு பெருத்தன்மையோடு இருக்கிறார் என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாகதான் இருக்கிறது. 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டு முதல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன.

அரவக்குறிச்சி தொகுதியில் நான் செலவு செய்தது குறித்து அரசு உளவுத்துறை, 70 ஆயிரம் போலீசாரை கர்நாடகாவிற்கு அனுப்பி கண்டுபிடிக்கட்டும். ஆட்சியே அவர்களிடம் இருக்கும்போது நான் என்ன பதில் சொல்ல வேண்டி உள்ளது. வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்தபோது ஒரு பைசா லஞ்சம் வாங்கினேனா என்பதை தேடிப்பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

ஒரு மனிதனை எதிர்க்க இத்தனை பேரா? தமிழக வரலாற்றில் முதன் முறையாக பார்க்கிறேன். ஒரு மனிதனை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த மனிதன் ஏதோ சிஸ்டத்தை கலைக்கிறான் என்று அர்த்தம். நல்லதை நோக்கி போகிறேன் என்பதால் தினமும் தாக்குதல் செய்கின்றனர். 2 போலீஸ் அதிகாரிகளை குழு அமைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அண்ணாமலை, குடும்பத்தினர் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளதா? வருமானம் எங்கிருந்து வருகிறது? என்பதையெல்லாம் கண்டுபிடித்து ஆதாரத்தை காண்பியுங்கள் நான் பதில் கூறுகிறேன்.

கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். கூட்டணி கட்சியாக யாராக இருந்தாலும் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் அல்ல. இதை எப்போது புரிந்து கொள்கிறோமோ, அப்போதுதான் பா.ஜ.க. வளர்ச்சி அடையும். அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது, நிரந்தரமான எதிரிகளும் கிடையாது.

அவரவர் அவர்களது கட்சிகளை வளர்க்கதான் இருக்கிறோம். அவர்கள் கட்சியை வளர்ச்சியை நாங்கள் நிறுத்துகிறோம் என்ற கவலை இருக்கிறது. அது தவறு கிடையாது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை, உங்கள் கடையை திறக்க நான் ஆள் இல்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆளுநர், அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் - என்ன விஷயம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.