சென்னை: தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியில் தெரு விளக்கைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி மின் ஒப்பந்த ஊழியர் முருகன் என்பவர் மின்சாரம் தாக்கி நேற்று (டிச.24) பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
-
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/s1YajLBez6
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/s1YajLBez6
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 25, 2023தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/s1YajLBez6
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 25, 2023
இது குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆத்திக்கண்ணு என்பவர் மகன் ஆ.முருகன் (வயது 45) நேற்று (24.12.2023) கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது” அண்ணாமலை குற்றச்சாட்டு