புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் - விராலிமலை சாலையில் ஒன்பது கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் 100 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்கள், நடை மேம்பாலம், புறவழிச்சாலை ஆகியவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்துவைத்தார்.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை சந்திப்பில் மேம்பாலம். 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துரைப்பாக்கம் - பல்லாவரம் போக்குவரத்து திசையில் மேம்பாலம்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் படிக்கட்டுகளுடன்கூடிய நடை மேம்பாலம். தாம்பரம் ரயில்வே நிலைய நடை மேம்பாலத்தை இணைத்து ஆகாய நடைபாதை.
ஒன்பது கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜிஎஸ்டி சாலையில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைபாலம்.
மதுரை மாவட்டம் ஆலம்பட்டி சேடப்பட்டி சாலை சௌடார்பட்டியில் நான்கு கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்.
தேனி மாவட்டம் கருப்பையாபுரத்தில் மூன்று கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பசுவங்கரணையில் கிளியாற்றின் நடுவே தடுப்பணை!