ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற பல நலத் திட்டங்களை மாநில அரசு செய்துவருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்புச் சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது.
இதனைச் சென்னையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். மேலும், 30 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தந்த மாவட்ட மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டடங்களையும் திறந்துவைத்தார்.