சென்னை புனித தோமையர் மலை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளுடன் காவல்துறையினருக்கான பகல்நேர மருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்தகங்களில் 36 படுக்கை வசதிகள், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்களுடன், முழுமையான மருத்துவ ஆய்வகங்களுடனும், சிறிய சிகிச்சைகளுக்கான அறுவை அரங்குகளுடனும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய முழு நேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆளிநர்கள், அவர்கள் குடும்பத்தினருக்குகான மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அனைத்து வகையான உயரிய சிகிச்சைகளை அளித்திட ஏதுவாக, சென்னையில் உள்ள காவல் மருத்துவமனை, அனைத்து பிரதான மருத்துவத் துறைகளையும் உள்ளடக்கிய முழுத்திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க... ரூ.27.79 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு தகவல் ஆணைய கட்டடம்: முதலமைச்சர் திறந்துவைப்பு!