ETV Bharat / state

‘முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி விலக வேண்டும்’  - கே.எஸ் அழகிரி! - resign

சென்னை: தண்ணீர் பிரச்னைக்கு முதலமைச்சர் அல்லது அமைச்சர் யாராவது ஒருவர் பொறுப்பேற்று பதவி விலக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ் அழகிரி
author img

By

Published : Jun 15, 2019, 11:46 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் குடிநீர் பிரச்னையை தமிழ்நாடு அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. அவர்களுக்குள் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்று பேசி வருகின்றனர். அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மழை நீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்த உள்ளோம், ஏரி, குளங்களைத் தூர் வார உள்ளோம். ஏனெனில் விமர்சனம் மட்டும் வைக்காமல் நாங்கள் பணி செய்ய விரும்புகின்றோம். தமிழ்நாடு அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்னைக்கு முதலமைச்சர், குடிநீர் வடிகால் வாரிய அமைச்சர் ஆகியோர் பொறுப்பை ஏற்று யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

கே.எஸ். அழகிரி

Intro:Body:

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை மாநில செயற்குழு கூட்டம் அக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், தமிழகத்தில் நிகழ்ந்து வரும் குடிநீர் 

 பிரச்சனையை தமிழக அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. அவர்களுக்குள் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்று பேசி வருகின்றனர். அதனால் தமிழ்நாடு காங்கிரஸ்  திருவள்ளூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மழை நீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்த உள்ளோம், ஏரி, குளங்களை தூர் வார உள்ளோம். ஏனெனில் விமர்சனம் மட்டும் வைக்காமல் நாங்கள் பணி செய்ய விரும்புகின்றோம். 

தமிழ்நாடு அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு முதல்வர் மற்றும் குடி நீர் வடிகால் வாரியம் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

ராகுல் காந்தி காவேரி மேலான்மை ஆனையத்தை கலைப்பதாக கர்நாடக மாநிலத்தில் உறுதி அளித்ததை தமிழக முதல்வர் குற்றம்சாட்டி உள்ளாரே என்பதற்கு அவர் பதில் அளிக்கையில் அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. அவ்வாறு ராகுல் காந்தி பேசியதை தமிழக முதல்வர் ஆதாரம் காட்டினால் நான் அரசியல் வீட்டு போக தயார். அவர் அவ்வாறு காட்டவில்லை என்றால் அவர் அரசியல் விட்டு விலக தயாரா என சவால் விட்டார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் கூட்டணி தொடரும். எங்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நல்ல புரிஉண்டு. வர இருக்கின்ற இடைதேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் இதுவே தொடரும். நாங்குநேரி தொகுதி யார் போட்டி இடுவது என்பது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 

ஜெயலலிதாவிற்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதிமுக அவரது தலைமையில் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டு கொடுத்து இல்லை. ஆனால் இன்றைய முதல்வர், துணை முதல்வர் டில்லியின் ஏவல்களாக செயல்பாட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.