சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அரங்கத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற முதல் மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " ஒருவர் மருத்துவப் படிப்பை முடித்த பிறகும்; மருத்துவராகப் பணி புரிவதற்கும், மேற்படிப்புக்குச் செல்வதற்கும் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் நெக்ஸ்ட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப் படிப்பு படிக்க நினைத்த மாணவ, மாணவியர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது. நெக்ஸ்ட் தேர்வைக் கொண்டு வருவதன் மூலம் கிராமப்புற மக்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நான்கரை ஆண்டுகள் படித்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இடம் பேசி, இந்தத் தேர்வை நிறுத்த நாங்கள் போராடுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
இஸ்லாமியர்களுக்கு அதிமுக துணை நிற்கும்' - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!