ETV Bharat / state

காவிரியில் தண்ணீர் திறப்பு: நீர்வளத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை உறுதிசெய்யுமாறு ஒன்றிய நீர்வள துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

cm mk stalin
cm mk stalin
author img

By

Published : Jun 11, 2021, 10:43 PM IST

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதம்தோறும் உரிய அளவில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,’காவிரி டெல்டா, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் டெல்டாவின் உயிர்நாடி.

இந்த ஆண்டு, டெல்டா விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா பயிர்களை சாகுபடி செய்ய காத்திருக்கும்நிலையில், டெல்டா நீர்ப்பாசனத்திற்கான நீர்த்தேக்கத்தை ஜூன் 12ஆம் தேதி சாதாரண தேதியில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாதம்தோறும் உரிய அளவில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.

மேலும் தென்மேற்கு பருவமழையிலிருந்து டெல்டா அதிகம் பயனடையவில்லை என்பதால், நீர்த்தேக்கத்திலிருந்து தொடர்ந்து நீரை வெளியேற்றுவதைப் பொறுத்து, கால அட்டவணையின்படி நீர் வெளியிடுவதில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் பயிரை கடுமையாகப் பாதிக்கும்.

அதே போல் அடுத்த மாதத்திலிருந்து குறுவை பயிர் மற்றும் சம்பா சாகுபடியைத் தொடங்குவதும், தொடர்வதும் இதனை நம்பிதான்.

இது தொடர்பாக, பொது எல்லையில் பெறப்பட்ட நீரின் அளவு, மத்திய நீர் ஆணையத்தின் பில்லிகுண்டுலு அளவிடும் தளம், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த மாதாந்திர அட்டவணையின்படி, லட்சம் ஏக்கர் நிலங்களைத் தக்கவைக்க வேண்டும்.

தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. நீரை வெளியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த பிரச்னை லட்சக்கணக்கான விவசாய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்’என, அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ’யானை வலசை பாதைகள் சூழ் இடங்கள் தனியார் காடாக அறிவிப்பு’ - இதற்கான முக்கியத்துவம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.