சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.
முதலில் வாழப்பாடி செல்லும் அவர் வரும் முன்காப்போம் மருத்துவ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து ஆத்தூர் செல்லும் அவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்து, இதர கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், நவீனப்படுத்தப்பட்ட தனியார் ஜவ்வரசி ஆலைப் பிரிவைப் பார்வையிடும் ஸ்டாலின், ஜவ்வரசிக்கான சில்லறை ஏலப் பிரிவினை தொடங்கி வைத்து ஜவ்வரசி ஆலை அதிபர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 4 மணிக்கு சேலம் கரூப்பூரில் உள்ள சிட்கோவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பார்வையிட்டுகிறார். மேலும் அங்குள்ள விசைத்தறி சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தர்மபுரியில் ஸ்டாலின்
பின்னர் வியாழக்கிழமை(செப்.30) தர்மபுரி செல்லும் முதலமைச்சர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு கட்டடங்களையும், புதிய மருத்துவ பிரிவுகளையும் தொடங்கி வைக்கிறார்.
காலை 10.30 மணிக்கு ஒக்கேனக்கல் மழைநீர் வடிநீர் திட்டத்தை பார்வையிடுகிறார். மாலை 3.45 மணியளவில் தர்மபுரி வத்தல்மலையில் விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பின் நாளை மாலை 6 மணிக்கு தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க : வரும்முன் காப்போம் திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்