ETV Bharat / state

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' மனுதாரர்களிடம் உரையாடிய மு.க ஸ்டாலின்!

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி மூலம் கலந்துரையாடினார்.

stalin
மு.க ஸ்டாலின்
author img

By

Published : May 29, 2021, 10:07 AM IST

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. தேர்தல் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வுகாணும் பொருட்டு புதிதாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை உருவாக்கப்பட்டது. இதுவரை பெறப்பட்ட அனைத்து மனுக்களும், மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுத் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (மே.28) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு கோ.எண். / 6 /2021 மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

துறை ரீதியாகப் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, அதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இத்துறையின் கீழ் பயனடைந்த தேனி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த பயனாளிகளுடன் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு உரையாடினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.