சென்னை: நாளை (ஜன.15) பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு வீடியோ மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் பொங்கல்! மகிழ்ச்சி பொங்கல்!
— TN DIPR (@TNDIPRNEWS) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/wEpxSTs6PM
">மக்கள் பொங்கல்! மகிழ்ச்சி பொங்கல்!
— TN DIPR (@TNDIPRNEWS) January 14, 2024
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/wEpxSTs6PMமக்கள் பொங்கல்! மகிழ்ச்சி பொங்கல்!
— TN DIPR (@TNDIPRNEWS) January 14, 2024
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/wEpxSTs6PM
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், களம் காண்பான் வீரன் என்றால், நெற் களம் காண்பான் உழவன் மகன் எனவும், போர் மீது செல்லுதலே வீரன் வேலை என்றால், வைக்கோற் போர் மீது உறங்குதலே உழவன் வேலை என்றும், பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம் நாற்று முடி பறித்தலே உழவன் நோக்கம்,
உழவனுக்கும், வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு வேற்றுமையோ ஒன்றே ஒன்று உழவன் வாழ வைப்பான், வீரன் சாக வைப்பான் என மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய வரிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் என திருக்குறளையும் மேற்கோள்காட்டி, கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பொங்கல் திருநாள் மட்டுமல்ல, எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லத்தக்க வகையில், தற்போது தமிழக அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், தேர்தலுக்கு முன்பு கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றியும், சொல்லாத பல திட்டங்களை செய்து காட்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இனிய பொங்கல், இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இந்த ஆண்டு எனவும், பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன். உங்கள் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் சிரிப்புதான் என்னுடைய பூரிப்பு என குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!