அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்க்கும் விதமாக வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையில் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள நிறுவனங்களின் பிரதி நிதிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனடிப்படையில், இன்று தலைமைச் செயலகத்தில் துபாய் நாட்டின் பிரதிநிதிகள், முதலமைச்சரைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் குறித்து விவாதித்தனர்.
இதையும் படிங்க:
பயிற்சி மருத்துவர்களின் பணி நேரம் குறித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த உத்தரவாதம்!