இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இதனைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும் மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளிலிருந்து வேலை செய்ய அனுமதித்திருக்கின்றன. அதுமட்டுமின்றி வைரஸ் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், தமிழ்நாடு தலைமை செயலர் சண்முகம், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் , காவல் துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.