ETV Bharat / state

'அரசு ஊழியர்கள் வாரம் 2 நாள்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும்' - chennai district news

நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் என கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

cm-meeting-in-chennai
cm-meeting-in-chennai
author img

By

Published : Jul 13, 2021, 6:20 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 13) மு.க. ஸ்டாலின் தலைமையில் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது, அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கினார்.

துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

கோ-ஆப்டெக்ஸ்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை இளையதலைமுறைக்கு கொண்டுசேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது, நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாள்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை (Branding) உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்

பாரம்பரியம் மாறாமல் கதர் பட்டு உற்பத்தியில் புதுமையான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த ஏதுவாக பட்டு நெசவாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், மேலுறைப் பெட்டிகளில் வடிவமைப்பு, பல வண்ண கலவைகளில் புதுமைகளைப் புகுத்தி சோப்பு, தேன், இதர பொருள்களை மக்களை கவரும் வகையில் மாற்றம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

கதர் கிராமப் பொருள்களைத் தீவிர சந்தைப்படுத்தும்விதமாக கல்லூரிகள், வர்த்தக மையங்களில் கண்காட்சிகள் (Sales Expo) அமைத்தல், சிறப்பு அங்காடிகள் (Super Market / Departmental Stores), பெரிய வணிக வளாகங்களில் (Shopping Mall) தனியே இருப்பு அடுக்கு அமைத்தல், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்துதல், தனிச்செயலியை (App) உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு பனைப்பொருள் வளர்ச்சி வாரியம்

சந்தையில் தரமான பனை வெல்லம் கிடைக்கப்பெறும் வகையில் மாவட்ட பனைவெல்ல உற்பத்தி, விற்பனைக் கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும்.

பட்டுவளர்ச்சித் துறை

பட்டுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக மல்பெரி பயிரிடும் பரப்பினை ஒரு லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட வேண்டும். கச்சா பட்டு உற்பத்தியினை சுமார் 3,100 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட வேண்டும், படித்த இளைஞர்கள் இதில் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

பட்டு விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கப்பெற ஏதுவாக அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் மின்னணு ஏல முறையினை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாட்டில் வெண்பட்டு உற்பத்தியினை விரிவுபடுத்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்திட வரைவு திட்ட அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்து அத்திட்டதினைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையங்கள் மூலம் நடைபெறும் விற்பனையை 35 கோடி ரூபாயிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 100 கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு விற்பனை நிலையங்களைப் புதுப்பித்து, கைவினைஞர்களிடமிருந்து தரமான படைப்புகளைப் பெற்று காட்சிப்படுத்தி, நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கும், இந்நிறுவனம் கொண்டுள்ள இணைய வழிச் சேவையை மேலும் விரிவுபடுத்தி உலகத்தின் எந்த இடத்திலுமுள்ள வாடிக்கையாளரும் கொள்முதல் செய்யும் வண்ணம் செம்மைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

விருதுகள் வழங்கி கௌரவிப்பு

கைவினைஞர்களின் பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் வண்ணம் விற்பனை நிலையங்களிலும், தமிழ்நாடு, வெளிமாநிலங்களின் முக்கிய நகரங்களில் கண்காட்சி விற்பனை நடத்துவது, தமிழ்நாடு, ஒன்றிய அரசு நிதியுதவியுடன் கைவினைஞர்களுக்கு குறிப்பாக இளைஞர்கள், மகளிர் கைவினைஞர்களுக்கு பயிற்சிகள் நடத்துவது, சிறந்த கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிறப்பு கண்காட்சிகள்

தமிழ்நாடு கைவினைப் பொருள்களுக்கான புவிசார் குறியீடு பெறப்பட்ட மாமல்லபுரம் கற்சிற்பங்கள், சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலை தட்டுகள், நாச்சியார் கோயில் பித்தளை குத்து விளக்குகள், பத்தமடை பாய் போன்ற கைவினைப் பொருள்களின் சிறப்புகளை வாடிக்கையாளரிடம் எடுத்துச் சென்று, அந்தக் கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்பு கண்காட்சிகள் நடத்திட முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மாமல்லபுரத்தில், கைவினைஞர்கள் சுற்றுலா கிராமம் அமைத்திட கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுப்படுத்துதல், தொழிற்கூடங்களை மேம்படுத்துதல், நிரந்தர விளம்பர பதாகைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்து அவற்றை கைவினைஞர்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கவும், மாமல்லபுரம், கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள கண்காட்சித் திடல்களை, கைவினைஞர்களுக்கு பயன்படும் வகையிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் புனரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

பொன்விழா

இந்நிறுவனம் 2023ஆம் ஆண்டு 50ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும்விதமாக பொன்விழாவினைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த கைவினைஞர்களை கௌரவப்படுத்திடவும், கைவினைஞர்களுக்கு நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திடவும் வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் என அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஒரு கோடி தடுப்பூசி வழங்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.