ETV Bharat / state

நவம்பர் மாதம் திரையரங்குகள் திறப்பு? - முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

cm meeting about theatre opening
cm meeting about theatre opening
author img

By

Published : Oct 27, 2020, 3:54 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மருத்துவ நிபுணர் குழுவுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.

வரும் 31ஆம் தேதியுடன் பொது ஊரடங்கு முடியவுள்ள நிலையில், அடுத்த பொது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.இதில் திரையரங்குகள் திறப்பு, பண்டிகை காலங்கள், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் தவிர பிற நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தகட்ட பொது முடக்கத்தை அறிவிக்கும் முன்பு மருத்துவ நிபுணர் குழுவுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும், அதன் அடிப்படையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்படும்.

அதேபோன்று நாளை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. வருகிற நவம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதாலும், மழைக்காலம் என்பதாலும், மேற்கொள்ள வேண்டிய கரோனா நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடனும்,
அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் காணொலி காட்சி மூலம், ஆலோசனை நடைபெறவுள்ளது. மேலும் பண்டிகை காலம் என்பதால் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. நவம்பர் மாதம் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளைய ஆலோசனை கூட்டத்துக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.