ETV Bharat / state

மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி!

சென்னை: மாநில அரசு கூடுதல் கடன் பெற விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை நிறுத்த வற்புறுத்தும் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமர் மோடி  இலவச மின்சாரம் ரத்து  மின்சார திருத்த மசோதா  முதலமைச்சர் பழனிசாமி  CM edappadi palanisamy  pm modi  farmers electricity  farmers electricity bill  எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : May 18, 2020, 3:20 PM IST

Updated : May 18, 2020, 3:54 PM IST

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது, மாவட்டந்தோறும் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு நன்றி.

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மாநில அரசின் வருவாய் பாதித்துள்ளது. அரசுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே கூடுதலாக கடன் பெற வேண்டியுள்ளது.

மாநிலங்களுக்கான கடன்வரம்பை அதிகரித்துள்ள அதேவேலையில், கடன் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தேவையற்றது. மத்திய, மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து நிலவாத திட்டங்களை தற்போது நிலவும் சூழலைப் பயன்படுத்தி உடனடியாக நிறைவேற்ற நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடைய நடவடிக்கை இல்லை.

மத்திய அரசிடம் இருந்து எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்காமல் பல சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் மின்துறை சீர்திருத்தங்களில் எந்தவித இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இதனை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசு நிர்பந்திக்க கூடாது.

கூடுதல் கடன் பெற விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை நிறுத்தி அதற்கு பதிலாக நேரடியாக பணம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிதியமைச்சரின் அறிவிப்புகள் எல்லாம் சரிதான்... அதற்கு எங்கிருந்து பணம் வரும்?

Last Updated : May 18, 2020, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.