காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு பல்வேறு கட்ட பாதுகாப்புகள் அமைக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அவர்களது பயணத்தை வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக வருகை புரிந்த இரு நாட்டுத் தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பை அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,"பாரம்பரியம், பண்பாடு மிக்க தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக மாமல்லபுரத்தை இந்தியா-சீனா இடையேயான பேச்சு வார்த்தைக்கு தேர்வு செய்தமைக்கு இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பை சிறப்பான முறையில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இரு தலைவர்களையும் உற்சாகமாக்கிய கலைஞர்களுக்கு நன்றி. இந்த கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அமைச்சர்களுக்கு நன்றி.
சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்த காவல்துறையினருக்கு நன்றி. அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் அமைத்துக் கொடுத்த அரசு துறைகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: 'மாமல்லபுரம் டூ மகாபலிபுரம்' - ஒரு நிமிட கதை...!