சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களைக் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறியக்கூடிய ரூ.10 கோடி மதிப்பிலான பெட்-சிடி ஸ்கேன் சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் உடனடி உதவி தொலைபேசி வசதி ஏற்படுத்தியும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மைய கட்டடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
மேலும் திருப்பூர், நாமக்கல், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத போக்குவரத்து ஊழியர்கள்...!