சென்னை: கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கூடுதலாகத் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து பெற்று பொதுமக்களுக்குப் போடுவது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
