கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற கிராமத்தில் மழை காரணமாக மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததில், குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள், மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் ஆகிய 15 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பலத்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்