ETV Bharat / state

காங்கிரஸ் எம்எல்ஏ-வின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்! - பிரின்ஸ்

சென்னை: கடலில் சிக்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

cm
author img

By

Published : Jul 9, 2019, 2:09 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய குளச்சல் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், மண்டைக்காடு புதூர் என்னும் இடத்தில் 16.6.2019 அன்று புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி சகாய ரெகின், இன்பென்டர் ரகீட், சச்சின் ஆகிய மூன்று சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சச்சின் உடல் 16.6.2019 அன்றும், சகாய ரெகின் என்பவரது உடல் 17.6.2019 அன்றும், இன்பென்டர் ரகீட் என்பவரது உடல் 18.6.2019 அன்றும் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

Intro:கடலில் சிக்கி இறந்த மூவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி Body:
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வேண்டி குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்து பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,          கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், லெட்சுமிபுரம் கிராமம், மண்டைக்காடு புதூர் என்னுமிடத்தில் 16.6.2019 அன்று புதூரைச் சேர்ந்த சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி சகாய ராஜன் மகன் சகாய ரெகின், ஸ்டேன்டர் மகன் இன்பென்டர் ரகீட் மற்றும் மிக்கேல் நாயகம் மகன் சச்சின் ஆகிய மூன்று சிறுவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சச்சின் உடல் 16.6.2019 அன்றும், சகாய ரெகின் என்பவரது உடல் 17.6.2019 அன்றும், இன்பென்டர் ரகீட் என்பவரது உடல் 18.6.2019 அன்றும் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினரின் வறிய நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.