இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான்-2 விண்கலம் ஏவியது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக தொழில்நுநுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லேண்டருடன் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் ஈடுபட்டன. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியம் நிலவில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேல்பரப்பில் இருப்பதாக நாசாவுக்கு தெரிவித்திருந்தார். அதை நாசாவும் உறுதிப்படுத்தி சண்முக சுப்பிரமணியத்தைப் பாராட்டியது.
விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிட்டத்தட்ட 3 மாதங்களான நிலையில், அதன் பாகங்களை தமிழ்நாடு இன்ஜினியர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்தது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் சண்முக சுப்பிரமணியன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்!