ETV Bharat / state

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்! - முதலமைச்சர்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

cm-announced-13-announcement-under-110-rule-for-govt-employee-and-teacher
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்!
author img

By

Published : Sep 7, 2021, 1:03 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13 அறிவிப்புகளை வெளியிட்டார்.

  1. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள்.
  2. சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு ஊதியம் பெறக்கூடிய வயது 58 லிருந்து 60ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் தற்போது பணியில் இருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயனடைவார்கள்.
  3. அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அது விரைவில் அறிக்கப்படும்.
  4. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் உதவிக்கேற்ப தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கத்தில் வைக்கும் நடைமுறை நீக்கப்படும்.
  6. 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணியிடை நீக்க காலம் ஆகியவை பணிகாலமாக முறை படுத்தப்படும்.
  7. வேலை நிறுத்த போராட்டத்தின்போது பணியிடம் மாற்றம் செய்த ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணி அமர்த்தும் வகையில் கலந்தாய்வின்போது அவர்களுக்கு என்று முன்னுரிமை வழங்கப்படும்.
  8. பணியில் இருக்கும்போது காலமான அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணையின் அடிப்படையில் அரசு பணி தகுதியில் உள்ள நடைமுறை சிக்கல்களின் ஈக்க முறையில் கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும்.
  9. அரசு பணியாளர்களுக்கான அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள், மகள்கள் ஆகியோருக்கு அவர்களின் வயது வரம்பினை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும் அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் இடர்பாடின்றி பயன் பெற ஏதுவாக அவர்களுக்கு உதவிடும் வகையில் தனி தொலைபேசி மையம் ஒன்று அமைக்கப்படும்.
  10. அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வுதியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொடர்பாக ரூ. 10 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்.
  11. புதியதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்டத்திலேயே வழங்கப்படும். இதன் மூலம் பவானி சாகர் சென்று பயிற்சி பெற வேண்டியது இல்லை .
  12. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைகள் அதிகரித்துள்ளதால், விகிதாசார அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட 13 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 1,000 கோடி ரூபாய் கோயில் சொத்துக்கள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.