சென்னை: கரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம்முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் இன்று (ஜுன் 19) தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
இதையும் படிங்க: யூ-ட்யூபில் கலக்கும் சேலை கட்டிய சாகச பெண் மோனலிசா