ETV Bharat / state

நட்சத்திர ஹோட்டலில் அஜய் வாண்டையாரை வெளுத்தெடுத்த கும்பல் - பரபரப்பு சிசிடிவி காட்சி ! - நடிகர் அஜய் வாண்டையார்

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளருக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
CCTV Footage
author img

By

Published : Dec 8, 2020, 8:26 PM IST

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளரும், நடிகருமான அஜய் வாண்டையார் கடந்த டிச. 5ஆம் தேதியன்று நள்ளிரவில் வந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அதே ஹோட்டலுக்கு வந்த மண்ணடியை சேர்ந்த கும்பல் ஒன்று மதுபோதையில் அஜய் வாண்டையாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றியதால் அந்த கும்பல் அஜயை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றது.

சிசிடிவி காட்சிகள்

பின்னர், மறுநாள் ஹோட்டலுக்கு வந்த அஜய் வாண்டையார், அவரது கூட்டாளிகளோடு ஓட்டல் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று ஹோட்டல் ஊழியர்கள் தன்னை பிடித்து வைத்துக்கொண்டு எதிர் கும்பலை சேர்ந்தவர் தன்னை அடிக்கும்வரை வேடிக்கை பார்த்ததாக கூறி அஜய் வாண்டையார் கும்பல் அதற்கு பழிவாங்கும் விதமாக ஹோட்டல் ஊழியர்களை அடித்து உதைத்ததுடன் ஹோட்டல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக எந்த புகாரும் காவல் துறையினருக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அஜய் வாண்டையாருக்கும், மண்ணடியை சேர்ந்த கும்பலுக்கும் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோவிட்-19க்கு பின் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.