அதிமுகவைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் இடையே எதிர்க்கட்சி தலைவராக கடும் போட்டி நிலவி வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மே.7) மாலை கூடியுள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது வெளியே கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதையும் படிங்க: 'புதிய ஆட்சி, மறுமலர்ச்சி, புதிய சிந்தனை, புதிய லட்சியத்தோடு புறப்படப் போகிறது' - துரைமுருகன்