ETV Bharat / state

உயர் நீதிமன்றத்தில் 'மஞ்சப்பை' உற்பத்தி இயந்திரம் திறப்பு விழா

author img

By

Published : Nov 10, 2022, 10:47 PM IST

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு அரசின் 'மஞ்சப்பை' விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 இடங்களில் அமைக்கப்படவுள்ள 'மஞ்சப்பை' வழங்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி முரளி உள்ளிட்ட பலர் இன்று (நவ.10) கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியபோது, 1907-ம் ஆண்டு பெல்ஜியத்தில் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தபோது உலகமே வரவேற்றதாகவும், 115ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நீர்நிலை, சுற்றுச்சூழல், வனம், கடல் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் மாசடைந்து, உலகமே பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டதாகவும், கால்நடைகள் கூட பிளாஸ்டிக்கை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புற்றுநோய் அதிகரிக்க பிளாஸ்டிக் பொருட்கள் தான் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகமும் பிளாஸ்டிக் இல்லாத மஞ்சப்பையுடன் கூடிய பசுமை சூழலுக்கு மாற வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டை 30%ஆக்க மனு: மைய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.