ETV Bharat / state

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றம் மறுப்பு...

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ருத்ர தாண்டவம்  சென்னை உரிமையியல் நீதிமன்றம்  ரிச்சர்ட் ரிசி  கவுதம் மேனன்  rudra thandavam  rudra thandavam movie  rudra thandavam movie issue  civil court  rutra thandavam movie case  civil court refuse to stay release rudra thandavam movie
rudra thandavam
author img

By

Published : Oct 1, 2021, 10:17 AM IST

சென்னை: திரெளபதி இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்டு கதாநாயகனாக நடித்துள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே பல தடைகளை கண்ட ருத்ர தாண்டவம், தற்போது தடைகற்களை தாண்டி திரைக்கு வருகிறது.

அந்த வகையில் இப்படம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாகவும், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அம்மனுவில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தடை விதிக்க மறுப்பு

இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடி உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இவ்வழக்கு உரிமையில் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரவின்குமார், படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார். படம் தணிக்கை முடிந்து விட்ட நிலையில் படத்திற்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, படத்தின் டிரைலர் மட்டும் வெளிவந்துள்ளதாகவும், முழு படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் மனுதாரர் மனு அளித்துள்ளதாகவும், மேலும் கடைசி நிமிடத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளதால் தற்போதைய நிலையில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார். இதனையடுத்து படம் திரையரங்குகளில் இன்று (செப்.1) வெளியாகிறது.

இதையும் படிங்க: தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கன்னட நடிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.