ETV Bharat / state

'தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படக்கூடாது' - மின்வாரியம் சுற்றறிக்கை - TNEB

பொதுத்தேர்வின்போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் சுற்றறிக்கை

author img

By

Published : May 3, 2022, 7:00 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி வருகிற மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் வருகிற 10ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், '10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வின்போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்புப்பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாலும்கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது. பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்றம் செய்யவும் அலுவலர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு மையங்களில் எந்தப் பிரச்னை வந்தாலும், அதை அவசர நடவடிக்கையாக கருதி சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் முன்கூட்டியே உடனடியாக சரி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராக உதவும் வகையில் செயல்பட வேண்டும்' என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக ஆளும் மாநிலத்தில் தலைவிரித்தாடும் வேலை வாய்ப்பின்மை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.