ETV Bharat / state

தமிழ்நாட்டில் திரையரங்கு திறக்கப்படுமா? - Theaters can be operated with 50 percent seats

நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள திரையரங்கங்களை 50 விழுக்காடு இருக்கைகளுடன் வரும் 15ஆம் தேதிமுதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையங்குகள் திறக்கப்படுமா? இல்லையா? என்ற குழப்பம் நிலவுகிறது.

theater reopening
மீண்டும் திறக்கும் திரையரங்குகள்...!
author img

By

Published : Oct 13, 2020, 9:03 PM IST

தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ், சிங்கிள் ஸ்கீரின் திரையரங்கங்கள் என மொத்தம் 1,112 திரையரங்கங்கள் உள்ளன. தமிழ் திரையுலகில் ஆண்டொன்றுக்கு 250க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதில் 100 பெரிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் உள்பட சுமாராக 210 படங்கள் திரையரங்கில் வெளியாகும். பெரும் முயற்சிக்கு பின்னர் சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் சுமார் 100 திரைப்படங்கள் வெளியாகின்றன. மீதமுள்ள படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கும் நிலை உள்ளது.

மேற்குறிப்பிட்டது, கரோனா தொற்றுக்கு முன்பு இருந்தநிலை, கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட முடியாமல் தேங்கி கிடக்கின்றன.

இந்நிலையில் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்கு இயங்கினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமிடம் கேட்டோம்.

இந்த நடவடிக்கையால் வசூல் நிச்சயமாக மிகக் குறைவாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் நலன் கருதி அதற்கு ஒத்துழைக்கப்பதாகத் தெரிவித்தார். இன்னும் மூன்று மாதங்கள் இந்தச் சூழல் தொடர வாய்ப்புள்ளதால், திரையரங்கு திறந்ததும் முதலில் சிறிய படங்களைப் பதினைந்து அல்லது இருபது நாள்களுக்கு திரையிடுவோம்.

பின்னர் மக்களின் வருகைப் பொறுத்து பெரிய படங்களை ரிலீஸ் செய்யவோம் எனத் தெரிவிக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், பார்வையாளர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளும் செய்யத் தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.

என்னென்ன நடவடிக்கைகள்?

  • வெப்பநிலை பரிசோதனை
  • இருக்கையில் இடைவெளி (ஒரு சீட் விட்டு ஒரு சீட்)
  • குடும்பத்தோடு வரும் பார்வையாளர்களுக்கு ஒரே வரிசையில் அமர வைக்க ஏற்பாடு
  • முகக்கவசம் கட்டாயம். அணியாதவர்களுக்கு திரையரங்கில் கொடுக்கவும் ஏற்பாடு
  • திரையரங்கில் பணிபுரியும் பணியாளர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம்
  • திரையரங்கில் சானிடைசர் வைக்கப்படும்
  • ஒருமுறைக் காட்சிக்கு இருமுறை கழிவறைகளை சுத்தப்படுத்த திட்டம்
  • திரையரங்கை விட்டு வெளியேறும்போது தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள், 50 விழுக்காடு இருக்கைகள் என மெனக்கெட்டு திரையரங்குகளைத் திறக்கும் உரிமையாளர்களுக்கு என்னமாதிரியான சிக்கல்கள் உருவாகும் என்பது குறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் கௌரவத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

அவர்,” திரையரங்கினுள் 50 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிப்பதில் எங்களுக்கு சிக்கல்களும், இழப்பீடும் இல்லை. கரோனா பாதிப்பு இல்லாத சாதாரண நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே 75 முதல் 100 விழுக்காட்டினர் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற வார நாள்களில் 30 விழுக்காடு மக்கள் மட்டுமே திரையரங்கிற்கு வந்தனர். ஆகையால், கரோனா தொற்று இல்லாத காலத்திலேயே திரையரங்கு 70 விழுக்காடு இருக்கைகள் காலியாகவே இருந்தன. இப்போது 50 விழுக்காடு பார்வையாளர்கள் என்பது ஞாயிற்றுக்கிழமை வசூலை மட்டுமே பெருமளவில் பாதிக்கும்.

மற்ற வார நாள்களில் எப்போதும் போல் மக்கள் வருகை 30 முதல் 50 விழுக்காடு இருந்தாலே எங்களுக்கு போதுமான ஒன்று. சினிமாத்துறை 50 விழுக்காடு மக்கள் வருகையை வைத்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலை சரியாக ஆறு மாதமோ அல்லது எட்டு மாதமோ ஆகலாம். அடுத்த ஆண்டு ஜூலைக்குள் கண்டிப்பாக இவை அனைத்தும் மாறும். பொதுமக்கள் கோயில்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதேபோன்று திரையரங்கத்திற்கு மக்கள் வருகை என்பது படிப்படியாக அதிகரிக்கும்” என்றார்.

சிறிய திரைப்படங்களை வெளியிட்டு மக்கள் வருகையை அறிய வேண்டும் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறும் நிலையில், பெரிய திரைப்படங்களை வெளியிட்டால் தான் மக்களின் வருகை அதிகரிக்கும் என்கிறார் அபிராமி ராமநாதன்.

தொடர்ந்து, “நடிகர் விஜய்க்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரைப் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை வெளியிட்டால் மட்டும்தான் மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திரையரங்கிற்கு வருவார்கள்.

இருப்பினும், விஜய் படம் முதலில் திரையரங்கிற்கு வருமா என்று முடிவு எடுக்க வேண்டியது தயாரிப்பாளரின் முடிவு. இப்போது, ரிஸ்க் எடுத்து படத்தை முதலில் வெளியிடலாமா அல்லது சிறிது காலம் கடந்த பிறகு வெளியிடலாமா என்று முடிவு எடுக்க வேண்டியது தயாரிப்பாளர்கள் பொறுப்பு என்கிறார் ராமநாதன்.

சுமாராக 40 முதல் 50 பேர் வேலை செய்த இடத்தில் தற்போது இரண்டு மூன்று பேர் மட்டுமே பணி புரியும் சூழலை கரோனா உருவாக்கி விட்டதாகத் தெரிவிக்கிறார் திரையரங்க பணியாளர் காசிம். திரையரங்கம் பலருக்கு கேளிக்கையாக இருப்பதோடு மட்டுமில்லாமல், பெரும்பாலானாருக்கு வாழ்வாதாரமாக இருப்பது தான் நிதர்சனம். காசிம் போன்ற பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட திரையரங்குகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனைச் செய்ய வேண்டும்.

கரோனா காலத்தில் வெளியாகும் படங்களின் வெற்றி என்பது திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கையில் இல்லை. மக்களின் கையில் உள்ளது என்கிறார் பார்வையாளர் தனலட்சுமி.

திரையரங்கங்கள் திறக்கப்பட்டு விஜய்யின் படம் வெளியானாலும் கரோனா பயமில்லாமல் மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் என்கிற உத்தரவாதம் இல்லை. ஆகவே படத்தின் வெற்றி என்பது மக்களைப் பொறுத்து மட்டுமே உள்ளது.

வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தாலும் திரையரங்கிற்கு வர மக்கள் தயங்கிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. இவற்றை கருத்தில் கொண்டு பெரிய படங்கள் முதலில் திரைக்கு வருமா அல்லது சிறிய படங்கள் வெளிவருமா என்று முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்கம் இயக்குவது பொருளாதார இழப்பு என்றாலும், மறுபக்கம் இணையங்களில் தொடர்ந்து திரைப்படங்களைக் கண்டு பழகியவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருவது சவாலான விஷயம்தான்.

மீண்டும் திறக்கும் திரையரங்குகள்...!

சமீபத்தில் ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டதால் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. ஓடிடி தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில் திரையரங்குகள் திறந்தால் போதும் என்ற மனநிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்.

அதற்கு திரையரங்கை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே திரையரங்கு உரிமையாளர்கள், ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:அக். 15 முதல் திரையரங்குகள்: தலைநிமிர்த்திய அத்துறை பங்குகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.