ETV Bharat / state

சினிமா சிதறல்கள்: ஹீரோவாக அறிமுகமாகும் லாரன்ஸின் தம்பி.. நடிகர் ரோபோ சங்கரின் உடல்நிலை உள்ளிட்ட சினிமா அப்டேட்கள்! - Cinema Sitharalgal

கல்வி வளர்ச்சி நாளான இன்று காமராஜர் சிலைக்கு மரியாதை செய்த விஜய் மக்கள் இயக்கம், நடிகர் ரோபோ சங்கரிடம் போனில் நலம் விசாரித்த கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா அப்டேட்களை சினிமா சிதறல்கள் தொகுப்பில் பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 15, 2023, 10:15 PM IST

Updated : Jul 15, 2023, 10:34 PM IST

பிரைமில் வெளியானது தண்டட்டி: ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தண்டட்டி. கிராமத்தில் வாழும் பாட்டிகளின் காதில் இருக்கும் தண்டட்டி பற்றிய கதையை இயக்குநர் சொல்லியிருந்தார். இப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது. சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் ரசிக்கும் வகையில் திரைக்கதை எழுதியிருந்தார் இயக்குநர் ராம் சங்கையா. பசுபதி, அம்மு அபிராமி மற்றும் ரோகிணி ஆகியோரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தண்டட்டி
தண்டட்டி

50 நாட்களை கடந்த அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்: கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. குற்றம் செய்தவரை கழுவில் ஏற்றும் ஆதிகாலத்து வழக்கத்தை திரைக்கதையில் இணைத்து வித்தியாசமான கதையாக கொடுத்திருந்தார் இயக்குநர் கௌதமராஜ். விமர்சனரீதியிலும் வசூல் ரீதியாகவும் இப்படம் பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் இன்று 50 ஆவது நாளை கடந்துள்ளது.

இதுகுறித்து இதன் இயக்குநர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. “ஒரு திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், 50 நாள்களாக கழுவேத்தி மூர்க்கன் எழுதப்பட்டும் பேசப்பட்டும் கொண்டிருக்கிறது, நாம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்” என தெரிவித்துள்ளார்.

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்
அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்

ஹீரோவாக களம் இருக்கும் லாரன்ஸ் தம்பி எல்வின்: நடிகர்‌ மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இவரது தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அருள்நிதி நடித்த டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கும் இப்படத்தில் லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தை இயக்கியிருந்தார். 5ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

லாரன்ஸ் தம்பி எல்வின்
லாரன்ஸ் தம்பி எல்வின்

காமராஜர் சிலைக்கு மரியாதை செய்த விஜய் மக்கள் இயக்கம்:நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இந்த நிலையில் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காமராஜரின் பிறந்த நாளை ஒட்டி சென்னை ஆலந்தூரில் ஊர்வலமாக சென்று அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பயிலகம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

ரோபோ சங்கரிடம் போனில் நலம் விசாரித்த கமல்ஹாசன்: சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பலரும் அவரது உடல் நிலை குறித்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் போனில் ரோபோ சங்கரை தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா ரோபோ ஷங்கர், மகள் இந்திரஜா ரோபோ ஷங்கர் மற்றும் உறவினர் கார்த்திக் அவர்களும் உலகநாயகன் கமல்ஹாசனிடம் பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரோபோ சங்கரிடம் போனில் நலம் விசாரித்த கமல்ஹாசன்

மாமன்னன் ஒரு மாபெரும் படம் - ஆர்கே செல்வமணி பாராட்டு: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் படத்தை பார்த்தனர். ஆர்.கே.செல்வமணி கூறுகையில், "மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துக்கள்.

அடுத்ததாக இப்படி ஒரு படைப்பை தயாரித்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். நான் படத்தை பார்த்து விட்டு அனைவருக்கும் போன் செய்து வாழ்த்து கூறினேன். வடிவேலுவை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம், மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

மாமன்னன்
மாமன்னன்

இயக்குநர் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மென்னையாக மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார். மாரி செல்வராஜை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை, அவரது உழைப்பு அபாரமானது. உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது பல படங்களை பார்த்து ரசித்திருப்போம், ஆனால் இந்தப் படம் பார்த்த பிறகு எனக்கு ஒரு பாதிப்பை மனதில் ஏற்படுத்தி விட்டது. தமிழ் சினிமாவிற்கு சிறந்த படத்தை தந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இதையும் படிங்க: Vishal 34:விஷால்-ஹரி படப்பிடிப்பு தொடக்கம்!

Last Updated : Jul 15, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.