சென்னை சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (62). இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம். சென்ற 15 ஆண்டுகளாக சந்திரன் சென்னையில் தங்கி சினிமாவில் புரொடக்ஷன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று (அக். 12) இரவு சந்திரன் வீட்டு சமையலறையில் திடீரென கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சந்திரனுக்கு 60 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அசோக்நகர், விருகம்பாக்கம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
தற்போது மருத்துவமனையில் சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி தீ விபத்து - 20 குடிசை வீடுகள் சேதம்