ETV Bharat / state

கிறிஸ்துமஸ் 2022: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து - MK Stalin

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநரும் முதலமைச்சரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் 2022: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

author img

By

Published : Dec 24, 2022, 11:19 AM IST

சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் நாளை (டிச.25) கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவருடைய மன்னிப்புச் செய்தி மனித குலத்திற்கான விலை மதிப்பற்ற பரிசாகும். மேலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம், நமக்கு ஒரே எதிர்காலம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நம் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை வழங்கட்டும். பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடும் ஏற்றத்தோடும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கக் கோரிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர் இயேசுபிரான். ‘உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல, பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக’ என்றும், ‘மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்’ என்றும், ‘அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’ என்றும். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இயேசு அருளிய போதனைகள் எக்காலத்துக்கும் எந்நிலத்துக்கும் பொருந்தும்.

இத்தகைய உயரிய நெறிகளைப் பின்பற்றி தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் கிறித்துவத் தோழர்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை நமது அரசு தொடர்ந்து ஆற்றி வருகிறது. 1989ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தையும், 1999ஆம் ஆண்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தையும், 2007ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் கருணாநிதி அமைத்தார்.

அவரது அடியொற்றி நடக்கும் நமது திராவிட மாடல் அரசும் கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறித்துவ உதவி சங்கம் கூடுதலாகத் தொடங்கிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமது திராவிட மாடல் அரசானது. கிறிஸ்தவ மக்களின் சமூக - பொருளாதார - கல்வி நிலையை உயர்த்துவதிலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியோடு உள்ளது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகள் கிடையாது - அமைச்சர் மா. சுப்ரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.