ETV Bharat / state

சென்னைவாசிகளுக்கு குளோரின் செலுத்தப்பட்ட பாதுகாப்பான குடிநீர்: குடிநீர் வாரியம் - சென்னை குடிநீர் வாரியம்

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 27, 2022, 8:15 PM IST

சென்னையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் 1,000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம், புழல் நீரேற்று நீரேற்றும் நிலையம், சூரப்பட்டு நீரேற்றும் நிலையம், வீராணம் நீரேற்றும் நிலையம், செம்பரம்பாக்கம் நீரேற்றும் நிலையம், நெம்மேலி மற்றும் மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னை குடிநீர் வாரியத்தால் தினந்தோறும் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம், நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பருவமழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். மேலும், உரிய இடைவேளையில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம்.

குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், ட்ரம்கள், மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். எனவே, பருவமழையினால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென வாரியம் கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி படுகொலை.. திருப்பத்தூர் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.