சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். கடந்த ஆறு நாள்களாக ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
மேலும், டிசம்பர் 15 (செவ்வாய்க்கிழமை) ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவிருந்த நிலையில், காவல் துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர். முன்னதாக, டிசம்பர் 14 சித்ராவின் தாய், தந்தை, சகோதரரிடம் வருவாய் கோட்டாட்சியர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.