பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் 15 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வரும் தம்பதியினர் ரவீந்திரன் (50), பத்மா. இவர்கள் நடத்தி வந்த மாத ஏலச்சீட்டில் சுற்றுவட்டார மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு போட்டுள்ளனர்.
இவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சீட்டு தொகை முதிர்வடைந்து பொதுமக்கள் தம்பதியினரிடம் தொகையை கேட்டபோது பணம் தருவதாக கூறி எட்டு மாதங்களாக அலைகழித்து வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், பணம் தராமல் தம்பதியினர் வீட்டை விட்டு காலி செய்து தலைமறைவாகி இருப்பதாகவும்,பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் சென்று புகார் அளித்தால் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறினர். அதுமட்டுமின்றி, பணத்தை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய தம்பதியினரை உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்டவரின் பணத்தை மீட்டு தரக்கோரியும், காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினர்.
இதை பற்றி குற்றம்சாட்டப்பட்ட ரவீந்திரன் கூறும்போது, சொந்த வீட்டை விற்று பணத்தை ஜனவரி மாதத்திற்குள் தருவதாகவும்,15 வருடமாக முறைப்படி ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும், ஏமாற்றும் நோக்கம் இல்லை எனவும் பதிலளித்தார்.
இதையும் படிங்க:
'உள்ளாட்சியின் மக்கள் பிரதிநிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டும்'