ETV Bharat / state

சீன கந்து வட்டி செயலி வழக்கு: சீனத் தூதரகத்திற்கு சென்னை காவல் துறை கடிதம்!

சென்னை: கந்துவட்டி செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்து விவரம், குற்றப் பின்னணி கேட்டு டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்திற்கு சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

சீன கந்து வட்டி செயலி வழக்கு
சீன கந்து வட்டி செயலி வழக்கு
author img

By

Published : Jan 10, 2021, 3:14 PM IST

சட்டவிரோதமாக கந்துவட்டிச் செயலியை இயக்கி வந்த இரண்டு சீனர்கள் உள்ளிட்ட நால்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.

அதிக அளவிலான வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து, செலுத்தத் தவறியவர்களை அவமானப்படுத்தி மிரட்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஷியோ எமஹோ (Xioa Yamao (38)), வூ யுவான்லும் ((Wu Yuanlum(28)) என இரண்டு சீனர்கள் உட்பட 8 பேரை, இந்த வழக்கில் கைது செய்துள்ளனர்.

இந்த கள்ளச் செயலி மூலம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாகவும், இச்செயலிகள் மூலம் இந்தியப் பணம் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறதா என்பது குறித்துமான விவரங்களையும் சென்னை மத்திய குற்றப்பிரிவிடமிருந்து அமலாக்கத் துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கந்துவட்டிச் செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்து விவரம், குற்றப் பின்னணி கேட்டு டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்குச் சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

மேலும் கந்துவட்டிச் செயலி மோசடி வழக்கில் கைதான சீனர்கள் உட்பட 4 பேர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்த அவர்களது அசல் பாஸ்போர்ட் பயண விவரம் குறித்து கேட்டும், சீனாவில் அவர்கள் குற்றப் பின்னணி குறித்த விவரங்களைக் கேட்டும் காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி:ஜன. 16 மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.