ETV Bharat / state

சொத்து விவரங்களை ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு! - IAS officer properties details

சென்னை: ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் தங்களது சொத்து விவரங்களை வரும் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை
சென்னை
author img

By

Published : Jan 20, 2021, 1:36 PM IST

அனைத்து ஐ.ஏ.எஸ். அலுவலர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஐ.ஏ.எஸ். அலுவலர் பணியில் உள்ளவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ‘ஆன்லைன்’ (இணையவழி) முறையில் தெரிவிப்பது கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - 1
தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - 1

அந்தவகையில், இந்தாண்டு வருகிற 31ஆம் தேதிக்குள், இணைய வழியில் உள்ள படிவத்தை நிரப்பி ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் அசையாத சொத்து விவரங்களை தெரிவிக்கவேண்டும். சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - 1
தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் - 2

அதன்படி, ஐ.ஏ.எஸ். அலுவலர்கள், எலக்ட்ரானிக் முறையிலோ அல்லது கையால் நிரப்பப்பட்ட படிவங்களை ‘ஸ்கேன்’ செய்தோ இணையதளம் மூலமாக அனுப்ப வேண்டும். ஆன்லைன் முறையில் அனுப்புவதற்கான வசதி, வருகிற 31ஆம் தேதிக்கு பின்னர் தானாகவே காலாவதியாகிவிடும்.

எனவே, மத்திய அரசு அறிவித்த முறையில், ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் தங்களுடைய அசையாத சொத்து விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கவேண்டும். இதன் நகலை மாநில அரசுக்கோ அல்லது பணியாளர் நலத்துறைக்கோ அனுப்பவேண்டிய தேவை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.