சென்னை: பம்மல் அனகாபுத்தூர் பகுதியில் ரூ.1 கோடி 25 லட்சம் செலவில் நடைபெறும் நடவாய் ஓடை வடிகால் பணிகள், அனகாபுத்தூர் மேட்டு தெருவில் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும். மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை