ETV Bharat / state

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் - முதலமைச்சர் கடிதம் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

முதலமைச்சர் கடிதம்
முதலமைச்சர் கடிதம்
author img

By

Published : Sep 20, 2022, 8:58 PM IST

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (20-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், இதுதவிர ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் 12 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: சாதித்திமிருடன் பேசிய செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும் - கோவை செல்வராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.