ETV Bharat / state

'லேட்டா வந்தாலும் கெத்துதான்'  24 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தைப் பெற்ற காவலர்கள்

10 ஆண்டுகளில் கிடைக்கக்கூடிய முதலமைச்சர் காவல் பதக்கத்தை, சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு 642 காவலர்கள் நேற்று பெற்றுள்ளனர்.

Chief Minister's police medal
முதலமைச்சர் காவல் பதக்கம்
author img

By

Published : Jul 16, 2021, 7:38 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகள் எந்தவிதமான துறை ரீதியிலான நடவடிக்கைகளிலும் சிக்காத காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.

இதுமட்டுமின்றி அவர்களுக்கு சம்பளத்தில் 400 ரூபாயும், தோள்பட்டையில் இரண்டு கோடுகளும் கூடுதல் கௌரவமாக வழங்கப்படும். அந்த வகையில், ஆண்டுதோறும் 10 ஆண்டுகள் காவல்துறையில் நிறைவு செய்த 100 இரண்டாம் நிலை காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் ஒதுக்கப்பட்டு வந்தது.

ஆனால் காவலர்களின் எண்ணிக்கை அதிகமானதால் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே இந்தப் பதக்கம் கிடைக்க பெற்றதால் அதே பேட்ச் காவலர்களுக்கு பதக்க கௌரவம் கிடைக்காமல் மன உளைச்சலிலிருந்து வந்தனர். மேலும் கூடுதலாக பதக்கம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்தனர்.

சென்னையில் 2018 ஆம் ஆண்டு வரையில் 300க்கும் குறைவான பதக்கங்களே வழங்கி வந்த நிலையில், 2019இல் 644 பதக்கமும், 2020இல் 608 பதக்கமும் அளிக்கப்பட்டது. இருப்பினும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதக்கம் கிடைத்திடவில்லை எனக் கூறப்படுகிறது.

24 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தைப் பெற்ற காவலர்கள்

இந்நிலையில், கடந்த 1997 பேட்ச் இரண்டாம் நிலை காவலர்களுக்கான முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று (ஜூலை 15) மாலை நடைபெற்றது. அதில் 642 காவலருக்கு முதலமைச்சர் காவல் பதக்கத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

10 ஆண்டுகளில் கிடைக்கக்கூடிய இந்தப் பதக்கம் 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்ததில் மகிழ்ச்சி எனவும், இப்போதாவது இந்தப் பதக்கம் கிடைத்ததே எனக் காவலர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக இரண்டாம் நிலை காவலர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பின், இந்த பதக்கம் வழங்கப்படாது என்பதால் 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின் உடனடியாக பதக்கம் வழங்க அரசுக்கு இரண்டாம் நிலை காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்..' - அண்ணாமலை பகிரங்க மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.