சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கரோனா வைரஸ், தற்போது ஈரானிலும் பரவியுள்ளது. அங்குள்ள துறைமுகங்களில் 450-க்கும் மேற்பட்ட இந்தியர்களில் 300 தமிழ்நாட்டு மீனவர்கள் உள்ளனர்.
இவர்களை இந்தியத் தூதரக உதவியுடன் தமிழ்நாடு கொண்டுவர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மத்திய அரசு ஈரானில் உள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டு தாயகம் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாளை நடக்கவிருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து!