ETV Bharat / state

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க CM கடிதம் - External Affairs Minister Jaishankar

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க முதலமைச்சர் கடிதம்

author img

By

Published : Nov 17, 2022, 10:47 PM IST

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், '16.11.2022அன்று இரவு தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி சிறையிலடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும், மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதாகவும், தமிழ்நாடு மீனவர்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளதாகவும்' முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந்தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது. தற்போது இது தொடர்பாகத் தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள் எடுக்கவும், முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரியைத்தூக்க வேண்டும்... காங்.நிர்வாகிகள் போர்க்கொடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.