கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் உட்பட 24 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் வளைகுடா நாடான கத்தார் நாட்டின் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 20 தமிழ்நாட்டு மீனவர்கள் அந்நாட்டு காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர், 'கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள 20 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 24 இந்திய மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களிடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதியின் 2ஆவது தவணை: கருணாநிதி பிறந்தநாளன்று தர ஏற்பாடு