கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதையடுத்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி 4,000 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தற்போது 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்ட நிதியிலிருந்து ஒதுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அக்கடிதத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் : கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் வேலூர் மாவட்ட நிர்வாகம்!